NDA தலைவர்கள் குடியரசுத்தலைவரை நாளை சந்திக்கின்றனர்.. (வீடியோ)

58பார்த்தது
கூட்டணி தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்த நிலையில், மத்தியில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை (ஜுன் 7) நேரில் சந்திக்க உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக நேற்று (ஜுன் 5) தேர்வு செய்யப்பட்டார். மோடி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே, அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, குமாரசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி