நாதகவுக்கு 'மைக்'கா அல்லது 'விவசாயி'யா..? பெரும் எதிர்பார்ப்பு

63பார்த்தது
நாதகவுக்கு 'மைக்'கா அல்லது 'விவசாயி'யா..? பெரும் எதிர்பார்ப்பு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், தீவிர பரப்புரை செய்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் வேட்பாளர் தேர்வு, பரப்புரை பயணம் உள்ளிட்டவற்றை அக்கட்சி திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், மக்களவை தேர்தலில் வழங்கப்பட்ட மைக் (ஒலிவாங்கி) சின்னத்தில் மீண்டும் போட்டியிடுமா? அல்லது ஏற்கனவே இருந்த கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டுப் பெறுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் நாதகவினர்.

8.19% வாக்குகளை வாங்கி மாநிலக் கட்சி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மைக் சின்னமே தொடரலாம் எனவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். விரைவில் வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்வது எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

தொடர்புடைய செய்தி