டெல்லிக்கு எதிரான இன்றைய(ஏப்ரல் 3) ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர் சால்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க நரைன் அதிரடியாக விளையாடினார். 21 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார். நரைன் உடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி (18) அதிரடியாக விளையாடி வருகிறார். 10 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 10 ஓவர் முடிவில் இது 2வது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.