மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார்? - சசி தரூர் பதில்

79பார்த்தது
மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார்? - சசி தரூர் பதில்
மோடிக்கு எதிரான ஒரு பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்ற கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், நாடாளுமன்ற அமைப்பில் இந்தக் கேள்வி பொறுத்தமற்ற ஒன்று. நாம் எப்போதும் தனிநபர்களை தேர்ந்தெடுப்பதில்லை. மோடிக்கு மாற்று என்பது அனுபவமிக்க, திறமையான பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் தலைவர்களின் குழுவாகத்தான் இருக்கும். அவர்கள் எந்தக் குறிப்பிட்ட நபரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பது இரண்டாம்பட்சமானது. நமது ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் காப்பாற்ற வேண்டும் என்பதே முதன்மையானது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி