அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் - ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மனைவியின் பிரிவை தங்க முடியாத கணவனும், மருமகள் பிரிவை தாங்கமுடியாத மாமியாரும் சோகத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் பின்புறம் மாமியார் மணிமேகலை மயங்கி கிடைத்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் விஷம் குடித்து உயிரிழந்து தெரியவந்தது. மருமகள் பிரிவை தாங்கமுடியாத அவர் இவ்வாறு செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.