ஐபிஎல் - கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு

64பார்த்தது
ஐபிஎல் - கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு
இன்றைய(மார்ச் 29) ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டஸ்லிசஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 83* ரன்களுடன் சிறப்பாக விளையாடினார். கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தனர். கேகேஆர் பந்துவீச்சாளர்களில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும், ரசல் 2 விக்கெட்டுகளையும், நரைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி