IT துறையில் பணியை இழந்த 20,000 பேர்

81பார்த்தது
IT துறையில் பணியை இழந்த 20,000 பேர்
அகில இந்திய IT மற்றும் ITeS ஊழியர் சங்கம் (AIITEU) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் 20,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவித்துள்ள AIITEU சங்கம், இந்த பணிநீக்கங்கள் சிறியது முதல் பெருநிறுவனங்கள் வரை அனைத்திலும் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், நடப்பு 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களில், சுமார் 2,000-3,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக, Nascent Information Technology Employees Senate (NITES) அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி