டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

65பார்த்தது
டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
‘இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை போலீஸ் விரட்டக் கூடாது' என கோரிய வழக்கில் தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடற்கரை, பூங்கா செல்வோரை போலீஸ் விரட்டுகிறது என சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் தள்ளிவைத்தது.

தொடர்புடைய செய்தி