பிறப்பு முதல் இறப்பு வரை மீன்கள் கண்களை மூடுவதே இல்லை. அதற்கு காரணம் மீன்களுக்கு இமைகளே கிடையாது. மீன்களின் உறங்கும் முறையும் நம்மிடமிருந்து வேறுபடுகிறது. மீன்கள் நம்மைப் போல அனைத்தையும் மறந்து தூங்குவதில்லை. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து மீன்கள் உறங்குகின்றன. இதனால் ஆபத்திலிருந்து விரைவாக செயல்படும் தன்மையைப் பெற்றுள்ளன. மீன்கள் தங்கள் கண்கள் வழியாகவே தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.