சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

70பார்த்தது
சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவை மக்களுக்கான திமுக வின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல் பந்திலேயே உதயநிதி ஸ்டாலின் சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 2024-ன் போது கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி