உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் ஷோகோ ஒகாவா உடன் மோதினார். சிறப்பாக செயல்பட்ட லக்சயா சென் 21-8, 21-14 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ஷோகோ ஒகாவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். லக்சயா சென் இறுதிபோட்டியில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசன் உடன் மோதுகிறார்.