தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய இடைநிலை சாதியினர் எதிர்ப்பு!

595பார்த்தது
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் மக்களுக்கு இடைநிலை சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்ததோடு, அனைத்து மக்களும் அக்கோவிலுக்குள் நுழைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். வருடந்தோறும் அக்கோவிலில் நடக்கும் தேரோட்டத்தில் தலித் மக்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி