கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிரஜ்வால் கைது செய்யப்படுவது உறுதி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரங்களில் இவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.