1 ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் - வானதி கோரிக்கை

76பார்த்தது
1 ரூபாய்க்கு  ஆவினில் மோர் வழங்க வேண்டும் - வானதி கோரிக்கை
கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க 1 ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். கோடை வெயில் தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனிடையே நாளை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் ஆரம்பமாகிறது. இந்த நிலையில், கோடை கால பிரச்சனைகள் குறித்து பேசியுள்ள வானதி சீனிவாசன், மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். 1 ரூபாய்க்கு ஆவின் நிறுவனம் மூலம் மோர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகள் சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் தாகம் தனித்து வரும் நிலையில், பாஜக இந்த புதிய கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி