உங்களின் அன்பு உத்வேகத்தை அளிக்கிறது - ஸ்டார் படக்குழு

85பார்த்தது
உங்களின் அன்பு உத்வேகத்தை அளிக்கிறது - ஸ்டார் படக்குழு
இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இன்று வெளியான படம் ‘ஸ்டார்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், “ஸ்டார் படத்திற்கு கிடைத்த வரவேற்பு மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களிடமிருந்து கிடைத்த இன்றியமையாத ஆதரவு எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. உங்களின் விலைமதிப்பற்ற அன்பு, எங்கள் குழுவிற்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சம் நிறைந்த நன்றி” என படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி