40 வயதிற்கும் மேற்பட்டவர்கள், பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்தது. மாறி வரும் வாழ்க்கை முறையில் எந்த வயதிலும் எது போன்ற உடல்நலக் கோளாறுகளும் ஏற்படலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதனால் இந்த புதிய விதிமுறை சரியானதாக இருக்கும். ஏனெனில் உடல் தகுதி இல்லாத வாகன ஓட்டுனர்களால் அவர்களின் உயிர் மட்டுமின்றி சாலையில் செல்வோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.