திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்!

84பார்த்தது
திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் மாற்றம்!
திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் எம்.பி.,யும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், அமைச்சர் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த விடுவித்து டாக்டர் சேகர் என்பரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கௌதம் சிகாமணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதற்காக தலைமையிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி