"போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்"

72பார்த்தது
"போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்"
போதைப்பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப்பொருள் என்பது சட்டம் ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல. சமூக ஒழுங்குப் பிரச்சனை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின், "மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் நகராட்சித் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தியாக வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்தி