ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை

74பார்த்தது
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (ஆக.7) பெரும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 875 புள்ளிகள் உயர்வுடன் 79,468ல் நிறைவடைந்தது. நிஃப்டி 305 புள்ளிகள் அதிகரித்து 24,297 புள்ளிகளில் நிலைத்து நின்றது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.83.80 ஆக உள்ளது. அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் இன்ஃபோசிஸ் பங்குகள் அதிக லாபம் ஈட்டின. இண்டஸ் இண்ட் வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன் பங்குகள் நஷ்டமடைந்தன.

தொடர்புடைய செய்தி