நேபாளத்திற்கு 75 மில்லியன் வழங்கும் இந்தியா

51பார்த்தது
நேபாளத்திற்கு 75 மில்லியன் வழங்கும் இந்தியா
இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அங்கு இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைய நூலகத்தை இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உட்கட்டமைப்பு பாதிப்பை புனரமைப்பதற்காக இந்தியா சார்பில் நேபாள நாட்டு மதிப்பு 1000 கோடி ரூபாய் (75 மில்லியன்) வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நேபாள மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவாக நிற்போம். நேபாள அரசின் முயற்சிகளுக்கு பங்களிப்போம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி