இந்தியாவின் முதல் CNG பைக் நாளை அறிமுகம்

76பார்த்தது
இந்தியாவின் முதல் CNG பைக் நாளை அறிமுகம்
இந்தியாவின் முதல் CNG பைக்கை பஜாஜ் நிறுவனம் நாளை (ஜூலை-05) அறிமுகம் செய்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. சிவப்பு, நீலம் உள்ளிட்ட 4 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த பைக் 110 முதல் 125 சிசி வரையிலான திறன் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கியர்களை கொண்ட இந்த பைக், ரூ. 90,000 விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி