பட்டினிக் குறியீட்டில் இந்தியா பின்தங்கி உள்ளதாக 2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு Global Hunger Index (GHI) அறிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்துள்ளார். மேலும் அவர், "GHI -யின் அறிக்கை இந்தியாவின் உண்மை நிலையை விவரிக்கவில்லை. GHI பயன்படுத்தும் பட்டினியை அளக்கும் காரணிகள் குறைபாடுடையதாகும். மேலும் இந்தியாவின் பட்டினி அளவைப் பொறுத்தவரை GHI உடைய மதிப்பீடு தவறானது" என கூறியுள்ளார்