CT2025: அரையிறுதி போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்நிலையில், 7.5 ஓவரில் கொன்னேலி பந்துவீச்சில் கேப்டன் ரோகித் ஷர்மா (28) எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.