நாட்டில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 "சைபர் கமாண்டோக்களை" நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இதில் பணியாற்றக்கூடிய தொழில்நுட்ப நிபுணர்கள், சந்தேகத்திற்குரிய சைபர் கிரைம் குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களைப் பிடிக்கவும் காவல்துறை மற்றும் பிராந்திய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.