கடந்த இரண்டு நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில், நீர்வரத்து இன்று (ஆகஸ்ட் 17) 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.