தம்பதிகளுக்கு இடையேயான சண்டையில் கணவரை கொலை செய்ய மனைவி முயன்ற சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரைச் சேர்ந்த ஹில்ஷாத் (40) - மனைவி ஷானோ இடையே சம்பவத்தன்று உணவு தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனைவி கணவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முற்பட்டுள்ளார். கணவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் வழக்குப்பதிந்து பெண்ணை கைது செய்தனர்.