அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் துறை துவக்கம்

65பார்த்தது
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ மெடிக்கல் துறை துவக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை பயோ மெடிக்கல் பாடப்பிரிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் கீழ் செயல்பட்டது. மருத்துவ துறையில் தொடரும் பல்வேறு தேவைகள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயோ மெடிக்கல் தனித்துறையாக துவக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ், பி.இ., பயோ மெடிக்கல், எம்.இ., பயோ மெடிக்கல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படும் என துறையின் தலைவர் சசிகலா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி