பாஜக கூட்டணியில் 7 தொகுதிகளை கேட்கும் ஐஜேகே

561பார்த்தது
பாஜக கூட்டணியில் 7 தொகுதிகளை கேட்கும் ஐஜேகே
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி 7 தொகுதிகளை கேட்டுள்ளது.
ஏழு தொகுதிகளில் போட்டியிட பாஜகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார். பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய அவர், பாஜகவுடன் தொடர்ந்து தோழமையுடன் இருந்து வருவதாக தெரிவித்தார். மேலும், விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம் எனவும் கூறினார். 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி