சமீப காலமாகவே குழந்தைகளுக்கு உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. இது குழந்தைகளில் கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் வழிவகுக்கிறது. கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்பொழுது அது தீவிர கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் கொழுப்பு கல்லீரலால் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், அதனுடன் தொடர்புடைய நிலைகளால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.