"எங்களுடன் கூட்டணி வைத்தால் சின்னம் தருகிறோம்"

73964பார்த்தது
நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தர தயாராக உள்ளதாக விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாருடைய தூண்டுதலின் பெயரிலும் நாங்கள் விவசாயி சின்னத்தை பெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் முறைப்படி சின்னத்தை பெற்றுள்ளோம். நாம் தமிழர் கட்சி சீமான் போட்டியிடும் தொகுதியில் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என அவர் தெரிவித்தார்.

நன்றி: Puthiya Thalaimurai

தொடர்புடைய செய்தி