'பாஜகவிடம் பணம் வாங்கியிருந்தால் என் தலையை வெட்டுங்கள்'

566பார்த்தது
'பாஜகவிடம் பணம் வாங்கியிருந்தால் என் தலையை வெட்டுங்கள்'
பாஜகவிடம் பணம் வாங்கியிருந்தால், என் தலையை வெட்டுங்கள் என நடிகரும், வேலூர் மக்களவை தொகுதி சுயேட்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (மே 21) செய்தி சானலுக்கு பேட்டியளித்த அவர், பாஜகவிடம் நான் பணம் வாங்கியிருந்தால், என்னுடைய தலையை இரண்டாக வெட்டுங்கள். மத அடிப்படையில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. இதுவரைக்கும் நான் நல்லவன் என்றுதான் பெயர் எடுத்திருக்கிறேன். இனியும் அது தொடரும் என்றார்.

நன்றி: சன் செய்திகள்

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்... https://x.com/i/status/1792825403901636962

தொடர்புடைய செய்தி