தியானம் பழக நினைப்பவர்கள் முதலில் இதை நினைவில் கொள்க

73பார்த்தது
தியானம் பழக நினைப்பவர்கள் முதலில் இதை நினைவில் கொள்க
தியானம் பழகுபவர்கள் முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் தியானிக்கும் பொழுது ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சில நாட்கள் தியானம் நன்றாக அமையும். சில நாட்கள் அப்படி இருக்காது. மிக முக்கியமான விஷயம் உடலும், மனமும் நிதானமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் தியானம் செய்வது கடினமாக இருந்தாலும், சில ஆண்டுகள் விடாமுயற்சிக்கு பின்னர் தியானப் பயிற்சி மேம்பட்டு, வளர்ச்சியை நம்மால் காண முடியும். ஆனால் தியான பயிற்சியை கைவிடுதல் மட்டும் ஆகாது.