பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டை தடை செய்வார்கள்..

64பார்த்தது
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டை தடை செய்வார்கள்..
புனித மாதமான சாவன் மாதத்தில் எதிர்க்கட்சிகள் அசைவம் சாப்பிடுவது அவர்களின் முகலாயர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், நான் சொன்னது போலவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கிடாவெட்டி, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்வார்கள். பாஜக வட இந்திய மேல்சாதி சமஸ்கிருத சைவ "இந்துத்துவா" என்று பிரச்சாரம் செய்கிறது, இது கிராமப்புற தென்னிந்திய நம்பிக்கை நடைமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி