நேற்று (ஜூன் 9) மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட சுரேஷ் கோபி, கேபினட் அந்தஸ்து உள்ள பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்ததாகவும், அமைச்சரவையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுரேஷ் கோபி, "சில மீடியாக்கள் தவறான செய்தியை பரப்பி வருகின்றன. கேரள மக்களின் பிரதிநிதியாக மோடி அமைச்சரவையில் பணியாற்றுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். மோடியின் தலைமையின் கீழ் கேரளாவின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன்" என பதிவிட்டுள்ளார்.