வரதட்சணை கொடுமை - அடித்துக்கொலை செய்யப்பட்ட மனைவி

60பார்த்தது
வரதட்சணை கொடுமை - அடித்துக்கொலை செய்யப்பட்ட மனைவி
உ.பி நொய்டாவில் ரூ.21 லட்சம் வரதட்சணை மற்றும் பார்ச்சூனர் கார் கேட்டு கரிஷ்மா என்கிற இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்ட நிலையில் மாமியார், கணவனின் சகோதரி மற்றும் சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர். 2022ம் ஆண்டு திருமணத்தின்போதே ரூ.11 லட்சம் மதிப்பில் நகைகள் மற்றும் கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் பெண் குழந்தை பிறந்ததை காட்டி மேலும் ரூ.10 லட்சம் பெற்ற நிலையில், கூடுதலாக பணம் கேட்டு கரிஷ்மாவை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி