பாக்., பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை!

55பார்த்தது
பாக்., பெண்ணுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை!
ஆயிஷா ராஷன் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் என்ற தனியார் மருத்துவமனையில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளைச்சாவடைந்த டெல்லியைச் சேர்ந்த முதியவரின் இதயம் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு, ஆயிஷாவுக்கு பொருத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான செலவுகளை மேற்கொள்ளும் வசதி ஆயிஷாவின் குடும்பத்துக்கு இல்லாததால், தனியார் அறக்கட்டளை ஒன்றின் நிதியுதவி மூலம் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.