பாட்டல் ராதா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், தனது தந்தையின் குடிப்பழக்கத்தை பற்றியும் குடியால் அவர் இறந்தது பற்றியும் கண்ணீர் மல்க கூறினார். மேலும், நான் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எனது அம்மா அழுவதை பார்க்க முடியாமல் தவித்து வந்த நான், தற்கொலை செய்துகொள்ளலாமா என எல்லாம் யோசித்து இருக்கின்றேன். எனது அப்பாவை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வர, எனது அம்மா, அண்ணன் மற்றும் தம்பிதான் மிகவும் கஷ்டப்பட்டார்கள் என கூறியுள்ளார்.