கேரள மாநிலம் மலப்புரம் அருகே கோயில் திருவிழாவில் யானை மிரண்டு தாக்கியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 பேர் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகுட்டன் என்ற யானை திடீரென மிரண்டு நபர் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி அடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து இன்று (ஜன., 08) அதிகாலை 2.15 மணியளவில் நடந்தது. தொடர்ந்து பாகன் யானையைக் கட்டுப்படுத்தினார்.