புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணி

25312பார்த்தது
புதிய சாதனை படைத்த ஹைதராபாத் அணி
ஐபிஎல் வரலாற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வரும் பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஹெட் 102, கிளாசன் 67, அபிஷேக் 34, மார்க்ரம் 32* மற்றும் சமத் 37* ரன்கள் எடுத்தனர். 288 சவாலான இலக்கை பெங்களூருவுக்கு ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. முன்னதாக மும்பைக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் எடுத்திருந்தது ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களாக இருந்த நிலையில், தனது சொந்த சாதனையை இந்த போட்டியில் ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி