நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கடந்த 2ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூட கதவில் மனித கழிவை பூசிய விவகாரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எருமபட்டியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் முன்விரோதம் இருந்ததால், சத்துணவு மைய கதவில் மனித கழிவை பூசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.