ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் வழக்கறிஞரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்த புகாரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஜீயர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக அண்மையில் இவர் கைது செய்யப்பட்டார்.