இன்று (ஜூன் 16) உலக அளவில் பல நாடுகளில் சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான நாளில் தந்தையை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என பார்ப்போம். தந்தையின் பழைய போட்டோ மற்றும் அவருடன் நமது குழந்தைப் பருவப் படங்களை பரிசாக தரலாம், ஒரு நல்ல இடத்தை தேர்வு செய்து தந்தை மற்றும் குடும்பத்தாருடன் சுற்றுலா செல்லலாம். தந்தைக்கு பிடித்த பொருளை பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக தந்தையுடன் நேரத்தை செலவிட்டாலே இனிமையான அனுபவங்கள் கிடைக்கும்.