இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, வேட்டி சட்டையுடன் உள்ள படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, 226 போட்டிகளை வழிநடத்தியவர் தோனி. அதில் 133 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 5 முறை கோப்பை வென்றுள்ளார்.