750,000 வாகனங்களை திரும்பப் பெறும் ஹோண்டா!

79பார்த்தது
750,000 வாகனங்களை திரும்பப் பெறும் ஹோண்டா!
முன் இருக்கை பயணிகளுக்கான ஏர்பேக் சென்சார் கோளாறுகளை கண்டறிந்துள்ள ஹோண்டா நிறுவனம், அமெரிக்காவில் 750,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுகிறது. அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் நேற்று வெளியிட்ட ஆவணங்களில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. டீலர்கள் இருக்கை சென்சார்களை, கார் உரிமையாளர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் மாற்றம் செய்து வழங்குவார்கள். மார்ச் 18 முதல் உரிமையாளர்களுக்கு இது பற்றி தகவல் அளிக்கப்படும். 2020 முதல் 2022 வரையிலான மாடல் ஆண்டுகளில் சில ஹோண்டா பைலட், அக்கார்டு, சிவிக் செடான், ஹெச்ஆர்வி மற்றும் ஒடிஸி மாடல்கள், 2020 ஃபிட் மற்றும் சிவிக் கூபே ஆகிய கார்கள் திரும்பப் பெறப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி