தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க, அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென 'HOME OF CHESS' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கான பாராட்டு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், "குகேஷின் வெற்றி கொடுக்கக்கூடிய நம்பிக்கை, தமிழ்நாட்டில் கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.