ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் ராஞ்சியில் ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தேரஷ் கங்லார் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, 4-வது முறையாக ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மம்தா பானர்ஜி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.