கோவையில் பெய்த கோர மழை.. சாலைகளை சூழ்ந்த வெள்ளம்

51பார்த்தது
கோவையில் பெய்த கோர மழை.. சாலைகளை சூழ்ந்த வெள்ளம்
தமிழகத்தில் கோடை வெயில் தணிந்து கோடை மழை தொடங்கியுள்ள நிலையில், கோவை புறநகரப் பகுதிகளான அன்னூர், எல்லப்பாளையம், குப்பேபாளையம், சர்க்கார் சாமக்குளம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி