விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் ஆலோசனை

58பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமைச்சர் ஆலோசனை
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார துவக்க பணிகள் குறித்து நேற்று (ஜுன் 13) அமைச்சர் பொன்முடி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்தும் தொகுதியில் உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். திமுக வேட்பாளர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி