காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி நமது நாட்டின் தேசிய வனவிலங்கு ஆகும். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததை தொடர்ந்து, புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.