மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.